இவர்களைத் தெரிந்து கொள்வோம்

சர்தார் வல்லபாய் படேல்

அஞ்ச நெஞ்சார என்று அனைவராலும் போற்றப்பட்டவர் விடுதலைப்போராட்ட வீரர் சர்தார் வல்லபாய் பட்டேல்.அவர் 1875ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் நாள் பிறந்தார்.1950 டிசம்பர் மாதம் 15ஆம் நாள் மறைந்தார்.

தாம் வாழ்ந்த விதத்தால் பாரத தேசம் என்றென்றும் தன்னை நினைக்கும்படி
செய்துவிட்டார். சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதம மந்திரி மற்றும் உள்துறை அமைச்சர் ஆகவும் பணியாற்றினார். ஐந்நூறுக்கும் மேலாக இருந்த சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து  வலி மையான சுதந்திர பாரதத்தை உருவாக்கினார்.  அதன் காரணமாக இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டார்.

பட்டேல் இங்கிலாந்தில் பாரிஸ்டர் படிப்பு படித்தவர்.அந்தபடிப்பில் முதல் வகுப்பில் முதல் மாணவராய் தேர்வுபெற்றார்.

வல்லபாய் பட்டேல் உறுதியான மனம் படைத்தவர். ஒருகாலை வழக்கில் அவருடைய காட்சிக்கறாருக்காக வாதாடிக்கொடிருக்கும்போது, அவரிடம் ஒரு தந்தி வந்திருப்பதாக தெரிவித்து அந்த தந்தியையும் அவரிடம் கொடுக்கப்பட்டது. சூடான விவாதத்திற்கிடையே தன்னிடம் கொடுக்கப்பட்ட தந்தியை பிரித்த்து படித்தார்.பிறகு அதை தன கோட்டுப்பையில் வைத்துக்கொண்டு வாதத்தை தொறந்தார்.நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்தவந்தபோதுதான் தந்தியில் அவர் மனைவி இறந்டுவிட்டர் என்ற தகவல்
வந்தது தெரியவந்தது.

தாம் வாதாடுவதை பாதியில் நிறுத்தினால் அவரது கட்சிக்காரருக்கு தூக்குத்தண்டனையாக கூட தரப்படலாம் என்பதால் அவரை வழக்கிலிருந்து விடுதலை செய்வதே முக்கியம் என முடிவெடுத்து மன உறுதியுடன் வழக்கைத்தொடர்ந்தாராம்.

அன்றைய வாதம் முடிந்த பிறகே தன மனைவியின்  இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள விரைந்தாராம்.

-oOo-

நன்றி:ஸ்ரீ சாரதா யக்ஞ பிரசாதம் – டிசம்பர் 2020