ரவி என்கிற ரவிச்சந்திரன், மழைக்குகூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவர். கடந்த 25 ஆண்டுகளாக ஆட்டோ ஒட்டி வருகிறார்.சென்னை பழைய வண்ணா
ரப்பேட்டையில் வாடகை வீட்டில் மனைவி,இரண்டு மகள்களுடன் வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
சென்னைக்கு வரும் பல்வேறு மாநிலபயணிகளுடன் பேசிப்பேசி, கொஞ்சம் இந்தி, கொஞ்சம் தெலுங்கு, கொஞ்சம் மலையாளம் பேசக்கூடியவர்.
சமீபத்தில் அவர் செய்த ஒரு காரியத்தால் இன்று மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். அப்படி அவர் செய்த காரியம் என்ன?
கொல்கத்தாவை சேர்ந்த சங்கரதாஸ் வயது 52 சென்னைக்கு வந்தபோது சென்னையில் இரவியின் ஆட்டோவில் பயணம் மேற்கொண்டார்.
சங்கரதாசுக்கு தமிழ் தெரியாது.இந்தியில் தான் போகவேண்டிய இடத்தை சொல்லிக்கொண்டே வந்தவருக்கு திடீரென பேச்சு தடைபட்டது.கண் இருண்டது.வியர்த்துக்கொட்டியது.. அப்படியே மயக்கம் போட்டு ரவியின் தோளில் சாய்ந்தார்..
வண்டியில் வந்த பயணி இப்படி மயக்கம் போட்டு விழுந்துவிட்டாரே என அதிர்ந்த ரவி, கொஞ்சமும் தாமதியாமல் பக்கத்தில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்குந் கொண்டு சென்றார்.அங்கெ சங்கரதாசை பரிசோதித்த டாக்டர், கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது என்றும் உடனே ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் படியும் சொன்னார்.
ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் பெரிய டாக்டர் யாரும் இல்லை. அவர்கள் உடனே ஆம்புலன்ஸ் வைத்து ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
ஆட்டோவை அங்கேயே விட்டு விட்டுஆம்புலன்சில் சங்கரதாசுடன் ரவி பயணம் செய்தார்.வழியில் சங்கரதாஸ் வாந்தி எடுக்க எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டார். ஒரு கட்டத்தில் கையிலும் வாங்கிக்கொண்டார்.
ஆஸ்பத்திரியில் சங்கரதாசை பரிசோதித்துப்பார்த்த டாக்டர்கள் “இன்னும் ஐந்து நிமிடங்கள் தாமதித்து வந்திருந்தால் இவரை உயிருடன் பார்த்திருக்கமுடியாது. ஆனாலும் இவர் உயிர் இன்னும் ஊசலாடிக்கொண்டுதான் இருக்கிறது.உடனடியாக ஆப்பரேஷன் செய்யவேண்டும். பேஸ்மேக்கர் கருவி பொறுத்த வேண்டும். அந்தகருவி வெளியில்தான் வாங்கவேண்டும்.இல்லாவிட்டால் உயிர் பிழைக்க முடியாது” என்றனர்.
சங்கரதாஸ் பையில் இருந்த செல்போனை எடுத்து கொல்கத்தாவில் உள்ள அவரது குடும்பத்தினருடன் தொடர்பு கொண்ட போதுதான் தெரிந்தது சென்னைக்கு ரயிலில் வரவே காசில்லாத குடும்பம் அது என்று..
ரவி கொஞ்சமும் யோசிக்காமல் தனது ஆட்டோ ஆர் சி புத்தகத்தை அடமானம் வைத்து ரூ,.30,000 திரட்டினார். நண்பர் ஒருவரிடம் நிலைமையை சொல்லி ரூ.27,000 கடனாக வாங்கினார். ரூ.57,000த்தை டாக்டர்களிடம் கொடுத்து ” நம்ம தமிழ்நாட்டை நம்பி வந்த ஒருவர் ஆதரவில்லாமல் இறந்தார்னு ஒரு கெட்ட பெயர் வரக்கூடாது டாக்டர்… இந்தாங்க என்னால புரட்ட முடிந்த பணம் ரூ.57,000 தான் என்று டாக்டர்களிடம் கொடுத்துள்ளார்.
சொந்த ஆட்டோவை அடமானம் வைத்து இவரை காப்பாத்த துடிக்கிறீங்களே? இவரு யாரு உங்களுக்கு தெரிஞ்சவரா? என டா க்டர்கள் கேட்க ” இவரு யாரு எதுன்னாலும் எனக்குத்தெரியாது.என் ஆட்டோவில் வந்த பயணி என்னைக்காப்பாத்துன்னு கேட்டுத் தோள்ல சாய்ந்த சக மனுஷன் அவ்வளவுதான்” என்றது டாக்டர்கள் வியந்து போய் பேஸ்மேக்கருக்கு மிச்சம் தேவைப்பட்ட பணத்தை அவர்களே பங்கிட்டு பேஸ்மேக்கரை வாங்கிவந்து வெற்றிகரமாக ஆப்பரேஷனை முடித்தனர்.
இதற்குள் பத்து நாட்களாகிவிட்டன. இந்த பத்து நாட்களும் சங்கரதாஸிற்கு, தானே காப்பாளராக இருந்து வார்டு வார்டாக கூட்டிச்செல்வது;மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்துவது;படுக்க வைப்பது;சாப்பிடவைப்பது;நேரா நேரத்திற்கு மருந்தும் கொடுப்பது என பார்த்துக்கொண்டார்.
பகல் முழுவதும் சங்கரதாசை பார்த்துக்கொள்வார். இரவில் ஆட்டோ ஒட்டி, வந்த வருமானத்தை வீட்டுச்செலவிற்கு கொடுத்து விடுவார். காலையில் வீட்டிலிருந்து பால் காய்ச்சி எடுத்துகொண்டு ஆஸ்பத்திரி வந்துவிடுவார். தாளிக்காத உணவு கொடுக்கவேண்டும் என்பதற்காக மட்டும் ஓட்டல் ஓட்டலாக அலைந்து வாங்கிவந்து கொடுப்பர்.
இப்படியே இருபது நாட்கள் சங்கரதாசை பார்த்து உடல் நல்லபடியாக தேறியதும் ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் செய்ததும் சென்னையில் மூன்று வழிபாட்டு தலங்களுக்கு அழைத்துச்சென்றார்.காரணம் சங்கரதாஸ் பிழைக்கவேண்டும் என்று அங்கெல்லாம் வேண்டியிருந்தார்.
பிறகு நல்ல படியாக கொல்கத்தாவிற்கு ரயிலில் அனுப்பிவைக்கும்போது சங்கரதாஸ் பேசவே இல்லை .கட்டடித்தழுவி கண்ணீர் விட்டு அழுதார்.அங்கெ மொழிக்கு வழியே இல்லை.அன்புதான் மேலோங்கியிருந்தது.
கிட்டத்தட்ட இருபது நாட்கள் கழித்து தனதுஆட்டோ நிறுத்தத்திற்குற்கு வந்த ரவியை ” எங்கேப்பா இருபது நாட்களாக காணோம்” என்று அவரது நண்பர் கேட்டிருக்கிறார். ” இப்படி ஒரு விஷயம் நடந்துருச்சு … அதான் வரமுடியலை ” என்ருய் சிஒல்லியிருக்கிறார்.
“என்னப்பா இவ்வளவு நல்ல விஷயம் செஞ்சுருக்கே… இது நாலு பேருக்கு தெரியட்டும்” என்றபடி தனக்குத்தெரிந்த ஊடங்கங்களுக்கு சொல்லியிருக்கிறார்.
இதன் மூலம் இவரைத்தொடர்பு கொண்ட திருஅப்பட எடிட்டர் மோகன் தன பங்கிற்கு அடகு வைத்த ஆட்டோவை மீட்டுக்கொடுத்திருக்கிறார்.. இதே போல அடுத்தடுத்து பலரும் உதவி ஸ்செய்ய முன்வர ” அதெல்லாம் வேண்டாம், நான் மனிதனாக என் கடமையைத்தான் செய்தென், அதற்கு எதற்கு வெகுமதி? பாராட்டு எல்லாம் ” என்றபடி அடுத்த பயணியின் அழைப்ப டற்று ஆட்டோவை செலுத்துகிறார் ரவி!.
நன்றி: தினமணி தமிழ் நாளிதழ் இணைப்பு தினமணி கதிர் சென்னைதேதி 02 மே மாதம் 2021