உலகமொழிகள் ஏறத்தாழ மூவாயிரம் (2795) என தமிழ் வரலாறு எனும் நூலில் மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் குறிப்பிட்டுள்ளார்.
உலக மொழிகள் பலவற்றுக்கு எழுத்து, சொல், யாப்பு, அணி ஆகியன உண்டு ஆனால் தமிழ் மொழிக்கு மட்டும்தான் பொருளுக்கு இலக்கணம் உண்டு. ஆகையால்தான் தமிழை ஐந்திலக்கணம் என்றனர்.
அக்கால மக்கள் வீர வாழ்க்கையையும் கொடைச் சிறப்பையும் கொண்டிருந்தனர் என்பதற்குச் சான்றாக திகழ்வது பத்துப்பாட்டும் எட்டுத் தொகையுமாகும்.
தமிழ்’ என்னும் சொல்லின் பொருள் இனிமை, எளிமை, நீர்மை என்பதாகும்.பெரும்பாலான வட இந்திய மொழிகளில் க,ச,ட,த,ப என்னும் ஐந்து வருக்கங்களில் ஒவ்வொரு ஒலிக்கும் நான்கு நான்கு எழுத்துகள் இருக்கின்றன. மேற்கூறப்பட்ட எழுத்துகளுள் தமிழில் ஒவ்வொன்றிற்கும் ஒரே
எழுத்துதான். ஒலி வேறுபட்டபோதும் எழுத்து ஒன்றுதான்
ஒவ்வொரு மொழியும் தனிச்சிறப்பினை கொண்டிருக்கும். ஆங்கிலம் வாணிக மொழியென்றும், இலத்தீன் சட்ட மொழியென்றும், கிரேக்கம் இசை மொழியென்றும், பிரெஞ்சு தூது மொழியென்றும், தமிழ் பக்தி மொழியென்றும் உலகோரால் வழங்கப்படுகின்றது. தமிழில்தான்
பக்திச் சொற்களும், பக்தி பாடல்கல்ளும் அதிகம்.
“நாம்” மற்றும் “நாங்கள்” என்னும் சொற்களுக்கு இடையே இருக்கும் வேறுபாடு. ஆங்கிலத்தில் இல்லையென்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்த அம்சம் மிகவும் சில மொழிகளில் மட்டுமே உள்ளது. “நாம்” என்பது முன்னிலையையும் குறிக்கும், “நாங்கள்” என்பது முன்னிலையைக் குறிக்காது என்பது பின்குறிப்பு.
ஆங்கிலத்தில் மரியாதையளிப்பது சொற்களை சரியாக வைப்பதில் உள்ளது. எவ்வளவு பெரிய ஆளாக இருப்பினும் “you” என்றே குறிப்பிடமுடியும். யப்பான் மொழியில், “தரலோக்கலில்” பேச முடியாது. மொழி நான் எண்ணும்படி என்னால் பேச முடியவேண்டும்.
சொந்தமாக சொற்களை வேர் சொற்கள் மூலம் உருவாக்கிக்கொள்வது என்பதும் ஒரு சிறப்பம்சம்.
இது தமிழ், சீனம், சிலநேரங்களில் செருமன், கன்னடம் கூட உருவாக்க வல்லவை.
இன்றும் பொலிவுடன் உயிர் வாழும், இயல், இசை, நாடக முத்தமிழ் செம்மொழி தமிழ்!
*சொல்லின் முதலெழுத்தை எடுத்துக் கடைசியில் சேர்த்து – வலம் இடமாக வாசிக்கவும். வரும் வார்த்தை- அதே;அதே.*
*கம்பம்*
*நீதிபதி*
*கோடுபோடு*
*ஆல்போல்*
*சடுகுடு*
*மன்னன்……….
*பொன்னன்
*கும்பம்*
*இடுகாடு – சுடுகாடு*
*பிம்பம்*
*சின்னன்- சின்னான்*
*ரம்பம்*
*அன்பன்*
*வீடுதேடு*
*சோலைமலை*
*மெய்யாய்-பொய்யாய்*
*பாதிமதி*
*அதிபதி*
*கோல்மால்*
*கடைமடை*
*கைலைமலை*
*சிம்மம்*
*காசிவாசி*
*பாசிஊசி*
*கூடைமுடை*
*பாரிஓரி*
இதையறிந்து தான்….,
யாமறிந்த மொழிகளில் தமிழ்மொழிபோல் இனிதாவதெங்குங் காணோம்…. என்றானோ மகாகவி பாரதி.*
#சும்மா ….
தமிழ் மொழியில் சும்மா என்ற வார்த்தைக்கு பொருள் என்ன? என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
உலகில் தோன்றிய பல மொழிகள் அழிந்து இருந்த இடமே தெரியாமல் போயிருக்கின்றன.தமிழ் மட்டும் இன்றளவும் பேச்சிலும், எழுத்திலும் நீடித்து நிலைத்து தன்னையும், தான் சார்ந்த இனத்தையும் பெருமைபடுத்திக் கொண்டிருக்கிறது.
சும்மா சொல்லுவோம் தமிழின் சிறப்பை,அடிக்கடி நாம் பாவிக்கும் வார்த்தை தான் இந்த சும்மா.
அது சரி சும்மா என்றால் என்ன?
பேச்சு வழக்கு சொல்லாக இருந்தாலும் தமிழ் மொழியில் உள்வாங்கப்பட்டுள்ள ஒரு வார்த்தை இந்த சும்மா “சும்மா” என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் 15 அர்த்தங்கள் உண்டு என்றால் உங்களால்
நம்ப முடிகிறதா?
வேறு மொழிகளில் இல்லாத சிறப்பினை, நாம் அடிக்கடி கூறும் இந்த “சும்மா” எனும் வார்த்தை எடுத்துக் காட்டும்.
- கொஞ்சம் “சும்மா” இருடா?(அமைதியாக/Quiet)
2.கொஞ்ச நேரம் “சும்மா” இருந்து விட்டுப் போகலாமே? (களைப்பாறிக்கொண்டு /Leisurely)
3.அவரைப் பற்றி “சும்மா” சொல்லக்கூடாது? (அருமை/in fact)
4.இது என்ன “சும்மா” கிடைக்கும்னு நினச்சியா? (இலவசமாக/Free of cost) - “சும்மா” கதை அளக்காதே? (பொய்/Lie)
- “சும்மா” தான் இருக்கு.நீ வேண்டுமானால் எடுத்துக் கொள் (உபயோகமற்று/ Without use)
- “சும்மா” “சும்மா”கிண்டல் பண்ணுறான். (அடிக்கடி/Very often)
8.இவன் இப்படித்தான்.. சும்மா சொல்லிக்கிட்டுஇருப்பான். (எப்போதும்/Always)
9.ஒன்றுமில்லை “சும்மா” சொல்கின்றேன்.(தற்செயலாக/Just)
10.இந்த பெட்டியில் வேறெதுவும் இல்லை “சும்மா” தான் இருக்கின்றது. (காலி/ Empty)
11.சொன்னதையே “சும்மா” சொல்லாதே.(மறுபடியும்/Repeat)
12.ஒன்றுமில்லாமல் “சும்மா” போகக் கூடாது – (வெறுங்கையோடு/Bare)
- “சும்மா” தான் இருக்கின்றோம் (சோம்பேறித்தனமாக/ Lazily)
14.அவன் “சும்மா” ஏதாவது உளறுவான் (வெட்டியாக/idle)
15.எல்லாமே “சும்மா” தான் சொன்னேன் (விளையாட்டிற்கு/Just for fun) நாம் அன்றாடம் பாவிக்கும் இந்த “சும்மா” என்கிற ஒரு சொல். நாம் பயன் படுத்தும்
இடத்தின்படியும்…. தொடரும் சொற்களின் படியும்.. பதினைந்து விதமான அர்த்தங்களைக் கொடுக்கிறது என்றால் அது “சும்மா” இல்லை சும்மாவாவது சிந்தித்தீர்களா இதனை..?
உலகில் உள்ள மற்ற மொழி அனைத்தும் வாயினால் பேச, செவிக்குக் கருத்தை உணர்த்துகின்றவை.ஆனால்,தமிழ் மொழி இதயத்தாலே பேசி இதயத்தால் உணர வைக்கும் மொழியாகும்.
இந்த சும்மா என்கிற வார்த்தையும் அதன் அர்த்தமும் உங்களுக்கு இப்போது தெளிவாக புரிந்திருக்கும்.
இந்த சிவபோகசாரம் பாடல் சும்மா ஒரு FINAL TOUCH ஆக…
சும்மா தனு வருமோ? சும்மா பிணி வருமோ?
சும்மா வருமோ சுக துக்கம்?
நம்மால் முன் செய்தவினைக்கு ஈடாம் சிவனருள்
செய்விப்பது என்றால் எய்தவனை நாடி இரு.
நன்றி:- தருமை குருமுதல்வர். சும்மா புலனத்தில் வந்தது
ஸ்ரீ இராமபிரான் புகழ்ந்த தமிழ்
சீதையை தேடுவதற்காக தெற்கே போகும்படி அனுமனுக்கு கட்டளை இட்டார் ஸ்ரீ இராமபிரான். போகும் வழியில் உள்ள மலைகளையும் ஆறுகளையும் நாடுகளையும், நாடுகளையும் பற்றி விளக்கினார் ஸ்ரீ இராமர். அப்போது அவர் “ஆஞ்சநேயா, போகும் வழியில் பொதிகை மலை இருக்கிறது. அந்த இடம் வந்தவுடன் பொதிகைமலைக்கு தள்ளியே நீ செல் ” என்று கூறினார்
அதற்கு ஆஞ்சநேயர் ” ஏன் சுவாமி ? ” என்று கேட்டார்.
” அந்த பொதிகைமலையில் அகத்தியர் இருக்கிறார். அவர் தமிழில் பல கவிதைகளை பாடிக்கொண்டிருப்பார். அந்த செந்தமிழை நீ கேட்டால்
சீதையைத் தேடிவந்தததை மறந்து அதன் அமுதச் சுவையிலேயே மயங்கி அங்கேயே தங்கிவிடுவாய். அதனால்தான் ” என்கிறார் ஸ்ரீ இராமச்சந்திரமூர்த்தி.
அப்படி ஸ்ரீ இராமபிரானால் புகழப்பட்ட மொழியே தெய்வத்தமிழ் மொழி !
-oOo-
நன்றி:ஸ்ரீ சாரதா யக்ஞ பிரசாதம் – டிசம்பர் 2020