நல்லாசிரியரை நினைவு கூறுவோம்

தாயை போல நேசி!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், சிங்கனுார், அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில், 2002ல், 12ம் வகுப்பு படித்த போது, விலங்கியல் ஆசிரியையாக விஜயலட்சுமி இருந்தார். பாடம் நடத்தும் போதெல்லாம், சக மாணவர்கள், அரட்டை அடித்து அட்டகாசம் செய்து வந்தனர்.
எதையும் மனதில் கொள்ளாமல் பணியை தவறாமல் செய்து வந்தார்; மாணவர்களின் அரட்டை போக்கு அதிகரித்தது.

ஒரு கட்டத்தில், ‘உங்கள் வயதையும் தாண்டித்தான், 45 வயதை எட்டியிருக்கிறேன். என் பிள்ளைகளுக்கும், உங்கள் வயது தான் இருக்கும்; அதனால் தான், உங்களை மாணவர்களாக பார்க்காமல், சேயாக எண்ணி கண்டிக்காமல் விட்டு வருகிறேன்…’ என்றார்.

தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டவர்களிடம், ‘தாயை போல என்னை நேசித்தால் போதும்…’ என்றார். அன்றிலிருந்து அரட்டை அடிப்பதை அடியோடு நிறுத்தினர் மாணவர்கள்.

தற்போது, என் வயது, 37; அந்த ஆசிரியை ஜாடையில் யாரைப் பார்த்தாலும், அவர் காட்டிய பாசமே நினைவுக்கு வருகிறது.
– ரா.ராஜ்மோகன்விழுப்புரம்.

நன்றி:தினமலர், தமிழ் நாளிதழ்,இணைப்பு:சிறுவர் மலர், சென்னை, சனிக்கிழமை 01 மே மாதம் 2021

காந்தியின் சுவட்டில்…

சுதந்திர போராட்டத்தின் போது, மகாத்மா காந்தி தங்கி ஓய்வெடுத்த பெங்களூரு, சீராமபுரம் சேவாசிரமம் பள்ளியில், 1963 வரை கல்வி கற்றேன்.
வழக்கமான பாடங்களுடன், தோட்டக்கலை, தையல் கலை, புத்தக பைண்டிங் போன்ற தொழில் பயிற்சிகளும், துப்புரவு, கழிப்பறை சுத்தப்படுத்துதல் போன்றவையும் கற்று தரப்பட்டன.
மாதந்தோறும் இலக்கிய கூட்டமும் நடந்தது. இதில், கவியரசு கண்ணதாசன், சிலம்புச் செல்வர் மா.பொ.சி., குன்றக்குடி அடிகளார் உள்ளிட்ட தமிழர் அறிஞர்கள் சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளனர். மாணவர்கள் பங்கேற்கும் கையெழுத்து இதழும் நடத்தப்பட்டது. அந்த இதழுக்கு ஆசிரியராக பொறுப்பேற்று செயல்பட்டேன்.
இந்த பயிற்சியால், சிறுகதைகள் எழுதினேன். ஒரு பத்திரிகையில் எழுதியதற்கு சன்மானமாக, அந்த காலத்தில், 10 ரூபாய் பெற்றேன். தொடர்ச்சியாக எழுத்துப்பணி செய்கிறேன். மூன்று புத்தகங்களை வெளியிட்டுள்ளேன்.
தற்போது, 75 வயதாகிறது. காந்தியின் காலடி பதிந்த பள்ளியில், கல்வி கற்றதுடன், சுய கவுரவத்துக்கான பயிற்சி பெற்றதையும் பெருமையாக எண்ணுகிறேன்.
– ப.மூர்த்தி, பெங்களூரு.

நன்றி:தினமலர், தமிழ் நாளிதழ்,இணைப்பு:சிறுவர் மலர், சென்னை, சனிக்கிழமை 01 மே மாதம் 2021

வழிகாட்டி ஓவிய ஆசிரியர் அந்தோ அவர்கள்

 தலைமைப்பண்பைஅறிந்து அதை வளர்த்த  புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, ஓவிய ஆசிரியர் அந்தோஅவர்களை நல்லாசிரியர் பகுதியில் பாராட்டுவோம்

வருடம்:1996  திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம், புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, ஓவிய ஆசிரியர் அந்தோ அவர்கள்:

எஸ்.பிரபுராஜா வுக்குள் இருந்த ஓவியத்திரனை மெருகேற்றி பல போட்டிகளில் பங்கு பெற வைத்தார். திறமை மட்டும் உயர்த்தாது திறமையுடன் கூடிய தலைமைப்பண்புதான் உயர்த்தும். தலைமைப்பன்பை வளர்க்க கல கலப்பாக பலரிடம் பேசி பழவேண்டும் என்று அறிவுரை கூறினார். பள்ளிகளுக்கிடையேயான நடந்த ஓவியக்கண்காட்சகு மாணவர்களை ஒருங்கிணைத்தல்,படைப்புகளை காட்சிப்படுத்துதல், வரவேற்பு வாயிலை வடிவமைத்தல் போன்ற பொறுப்பிலயேற்று செவ்வனே செய்து பாராட்டுகளை பெற்றார். அன்றுதான்

எஸ்.பிரபுராஜா விதம் இருந்த தலைமைப்பண்பை உணர்ந்தார்.  தற்போது அவருடைய வயது:36  தனியார் பல்கலைக்கழகத்தில் கணினித்துறை தலைவராக பணியாற்றுகிறார். அந்த  ஓவிய ஆசிரியர் அந்தோ அவர்கள் உணரச்செய்த தலைமை பண்பு இன்று  எஸ்.பிரபுராஜா அவர்களை வழிநடத்துகிறது. ஓவிய ஆசிரியர் அந்தோ அவர்களை வழிகாட்டியாக எண்ணி  எஸ்.பிரபுராஜா வாழ்ந்து வருகிறார்.

நன்றி:தினமலர் சிறுவர் மலர்   தேதி 21 மார்ச்சு மாதம் 2021

தயக்கமற்ற உழைப்பு

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம், அரசு உயர் நிலைப்பள்ளியில் 1973 தலைமை ஆசிரியர் எஸ்.வி. சுப்ரமணியம் ஆங்கில பாடம் எடுப்பார். விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு நடத்தி உற்சாகப்படுத்துவார்.

கல்வி ஆண்டின் இறுதியில் அவரது சொந்த கிராமத்திற்கு சென்றவர் எதிர்பாராதவிதமாக மிதிவண்டியில் இருந்து தவறி விழுந்துவிட்டார்.இடது கையில் அடிபட்டு, மாவு கட்டு போடவேண்டிய நிலை ஏற்பட்டது. பொதுத்ததேர்வு நெருங்கி கொண்டிருந்தது. எனவே, வேறு ஆசிரியரை வைத்து பாடங்களை முடிக்கவேண்டிய ஞ்சமில்லை ஏற்பட்டது. இதற்கு அவர் ஒப்புதல் அளிக்கவில்லை.

வழியை பொருட்படுத்தாமல் தாவரம் வந்து வகுப்பை நடத்தினார். அனைத்து பாடங்களையும்  பொறுப்பாக கற்றுத்தந்தார்.

இறுதித்தேர்வில் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று மகிழ்ந்தனர் என்று தன்னுடைய தலைமை ஆசிரியரின் நற்பண்பை நினைவு கூறு கிறார் எண்ணையில் வசித்தத்துவரும் 63வயதான பி. மோகன்ராஜூ .

-oOo-

நன்றி:தினமலர்  சிறுவர் மலர் 30 ஜனவரி 2021

தலைமுறை அறிவுரை!

tamil story

நன்றி:தினமலர் 13 மார்ச்சு 2021

கிறுக்கு மாஸ்டர்!

கோவை, ஆர்.எஸ்.புரம், ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில், 1960ல், 7ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.

அன்று ஓவிய ஆசிரியர் வரதராஜன், கரும்பலகையில் ஓவியம் வரைந்து கொண்டிருந்தார்.

சாக்பீசால் போட்டக் கோடுகளை விலங்கு போல் மாற்றிக் கொண்டிருந்தார். அவர் கிறுக்கியதைக் கண்டு, பக்கத்தில் அமர்ந்திருந்தவனிடம், ‘கிறுக்கு மாஸ்ட்டராக இருப்பார் போல…’ என்று கூறி விட்டேன்.

இதை உடனடியாக அவரிடம் போட்டுக்கொடுத்து விட்டான். கடும் கோபத்தில்
கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அடிவாங்கிய சூட்டுடன், ‘கிறுக்கி வரைவதில் மாஸ்ட்டராக இருக்கிறீர் என்று தானே கூறினேன்…’ என்றேன்.

அதை பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. என்னை அலட்சியப் படுத்தினார்.

போட்டுக்கொடுத்தவன், ‘இப்படி அடிப்பார் என்று நினைக்கவில்லை… என்னை மன்னித்து விடு…’ என வருந்தினான். நேரம் சரி இல்லை என அதை கடந்தேன். இப்போது, என் வயது, 73; அந்த சம்பவத்தை நினைக்கும் போதெல்லாம் சிரித்து விடுகிறேன்!

– க.சதாசிவம், கோவை.

நன்றி:தினமலர், தமிழ் நாளிதழ்,இணைப்பு:சிறுவர் மலர், சென்னை, சனிக்கிழமை 01 மே மாதம் 2021

கேள்விகளால் வேள்வி செய்ய பயிற்சி தந்த சமூக அறிவியல் பாட ஆசிரியை
திருமதி.சுசீலா அவர்கள்

வருடம்:1998 கள்ளக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சமூக அறிவியல் பாட ஆசிரியை திருமதி.சுசீலா அவர்கள் வகுப்பில் ஒவ்வொரு பாடம் நடத்தியதும் ” பாடத்தில் கொடுக்கப்பட்டுள்ள கேள்விக்கான பதிலை மட்டும் படித்தல் போதாது. பாடம் முழுவதையும் படித்து புதிய கேள்விகளை உருவாக்க வேண்டும். அதற்குரிய பதில்களையும் தயார் செய்து வாருங்கள்” என்று அறிவுரை கூறினார்.

பாடங்களை ஊன்றிப்படித்து ஏராளமான கேள்வி-பதில்களை தயாரித்து பாராட்டுக்கள் பெற்றார். இந்த பயிற்சியை தொடர்ந்து பின்பற்றியதால் அரசு பொதுத்தேர்வில் 97 மதிப்பெண்கள் பெற்றுவதாக நினைவு கூர்கிறார் திருமதி. தனலட்சுமி. அவ்ரகற்றுத்தந்த பயிற்சியை  தன்னுடைய  10வயது மகளுக்கு  பாடம் கற்பித்து வருவதாக கூறுகிறார்.

அதாஹ்ன் மூலம் அந்த சமூக அறிவியல் பாட ஆசிரியை திருமதி.சுசீலா அவர்கள் நினைவை போற்றிவருவதாக  கூர்கிறார் திருமதி. தனலட்சுமி.

நாளை மலருமா!

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல், சொக்கலால் மேல்நிலைப் பள்ளியில், 1993ல், 11ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அன்று, அறிவியல் ஆசிரியர் சம்பத், வீட்டுப் பாடம் செய்யாத மாணவனிடம் விளக்கம் கேட்டார். தட்டிக் கழிக்கும் விதமாக, ‘நாளை செய்கிறேன் ஐயா…’ என்றான்.

உடனே, மற்றொருவனை அழைத்து, ‘கரும்பலகையின் மேல் விளிம்பு பகுதியில் எட்டாத உயரத்தில், ‘நாளை’ என எழுது…’ என்றார்.
மறுநாள் கரும்பலகையில் எழுதியிருந்ததை சுட்டிக்காட்டி, ‘நேற்று குறிப்பிட்ட, ‘நாளை’ என்பது வந்து விட்டதா… மேலே எழுதியிருப்பதைப் படியுங்கள்…’ என்றார்.

நாங்கள், ‘வரவில்லை ஐயா…’ என்றோம். அன்றைய பாடங்களை அன்றே செய்ய வேண்டும் என உணர்ந்தோம். அன்று முதல் தவறாமல் வீட்டுப்பாடம் செய்து வந்தோம்.

மற்றொரு நாள், ‘இமயமலையின் உயரம் என்ன…’ என கேட்டார் அந்த ஆசிரியர். யாருக்கும் தெரியாமல் விழித்தபோது, ‘எட்டு எட்டாக, நாலு எட்டு வைத்தால், இமயமலை உச்சிக்கு போயிடலாம்…’ என்று விளக்கினார். புரியவில்லை; பின், கரும்பலகையில், 8,848 என எழுதினார். இமயமலை, எவரெஸ்ட் சிகரம் உயரத்தை மீட்டர் அளவில் சுலபமாக புரியும் வகையில் விளக்கியிருந்ததை புரிந்துகொண்டோம்.தற்போது எனக்கு, 43 வயதாகிறது; என் குழந்தைகள் படிப்பில், இது போல் சுலபமாக நினைவில் பதிக்கும் வழிமுறைகளை புகுத்தி வருகிறேன்; ஆர்வமுடன் கற்கின்றனர். இதற்கு வித்திட்ட அந்த ஆசிரியரை நன்றியுடன் நினைவில் கொண்டுள்ளேன்!
– சு.ஹ.ராம்குமார், திருநெல்வேலி.

நன்றி: தினமலர் சிறுவர் மலர் சனிக்கிழமை 19 ஜூன் 2021

school teacher story