தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். இது மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப்பற்றி விளக்கும் நூல்.இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர் என்றும் அனைவருக்கும் தெரியும். இந்த திருக்குறளைப்பற்றி சில அரிய தகவல்..
திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற மூன்று பால்களை உடையது.
அறத்துப்பாலில் 38 அதிகாரங்கள், பொருட்பாலில் 70 அதிகாரங்கள், காமத்துப்பாலில் 25 அதிகாரங்கள் இடம் பெற்றுள்ளன.
திருக்குறள் தமிழ்ச் செய்யுள்களில் முதல் பாவாகிய வெண்பாவில் முதல் வகையாகிய குறட்பாக்களால் ஆனது.
திருக்குறளில் முப்பால்களிலும் 120-க்கும் மேற்பட்ட உவமைகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. திருக்குறளில் அனிச்ச மலர் 4 முறையும், யானை 8 முறையும், பாம்பு 3 முறையும் சுட்டப்பட்டுள்ளன.
“தொடிற்கடின் அல்லது காமநோய் போல விடிற்கடின் ஆற்றுமோ தீ” (1159) என்ற குறள் ஒரே எழுத்தில் முடிந்துள்ளது.என்ற இந்தக் கொம்பு எழுத்துக்கள் இல்லாமல் 17 குறள்கள் உள்ளன.
46 குறள்களில் உயிரினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அன்புடைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, அருளுடைமை, அறிவுடைமை, ஊக்கமுடைமை, ஆள்வினையுடைமை, பண்புடைமை, நாணுடைமை என வள்ளுவர் கூறிய உடைமைகள் 10.
“ஒருமையுள் ஆமைபோ லைந்தடக்க லாற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து” – என்ற குறளில் 1.5.7 என்ற பகா எண்கள் குறிபிடப்பட்டுள்ளன.
அன்னம்,கூகை (ஆந்தை), கொக்கு, காக்கை, புள்(பறவை), மயில், ஆமை, கயல் மீன். மீன் (விண்மீன்), முதலை, நத்தம்(சங்கு), பாம்பு, நாகம், என்பிழாது(புழு) ஆகியன இடம் பெற்றுள்ளன.
பலோடு தேன்கலந் த்ற்றே பணிமொழி வாலெயி றூறிய நீர் (112) – என்ற குறளில் பால், தேன், நீர் என்ற மூன்று நீமங்கள் இடம் பெற்றுள்ளன.
“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு” – என்ற குறளில் ஒரே சொல் 6முறை இடம் பெற்றுள்ளது.
ஒரே சொல் 5 முறை 5 குறட்பாக்களிலும், ஒரே 4முறை 22 குறட்பாக்களிலும், ஒறே சொல் 3 முறை 27 குறட்பாக்களிலும் இடம் பெற்றுள்ளன.
1330 குறட்பாக்களில் எந்த இடத்திலும் கடவுள் என்ற சொல் இடம் பெறவில்லை.
திருக்குறளில் 50 பிறமொழிச் சொற்கள் இடம் பெற்றுள்ளன.
திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்
1 | திருக்குறளில் ‘தமிழ்‘ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. |
2 | திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812 |
3 | திருக்குறளின் முதல் பெயர்- முப்பால் |
4 | திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133 |
5 | திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380 |
6 | திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700 |
7 | திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250 |
8 | திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330 |
9 | திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது |
10 | ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால், ஏழு சீர் களை கொண்டது. |
11 | திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000 |
12 | திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194 |
13 | திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை |
14 | திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை |
15 | திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம் |
16 | திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி |
17 | திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள |
18 | திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல் |
19 | திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில் |
20 | திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெழுத்து-னி |
21 | திருக்குறளில் ஒரு சொல் அதிக அளவில், அதே குறளில் வருவது பற்று” – ஆறு முறை |
22 | திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங |
23 | திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள் ( அகர முதல என தொடங்கும் முதல் குறள் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ளது, இதில் ஆதி பகவன் – என்பது கடவுளை குறிக்கிறது) |
24 | திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர் |
25 | திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர் |
26 | திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப் |
27 | திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது. |
28 | திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது. |
29 | எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது. |
30 | ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது. |
31 | திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் வெளிவந்துள்ளது. |
32 | திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர் |
33 | திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. |
நெடில் வாராக் குறள் ஒன்று. | “முகநக நட்பது நட்பன்று நெஞ்சத் தகநக நட்பது நட்பு.” |
துணைக் கால் வராத குறள். | கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. |