உடல்-நலம்

*_என்றும் இளமையாக வாழ_ சான்றோர் கூறும் எளிய வழி !!*

️ அனைவருக்கும் ‘ _என்றும் இளமையாகவே இருக்க வேண்டும்_ ‘ என்ற என்ற ஆசை இருக்கும்.

அதற்கு சான்றோர்கள் மிகவும் எளிய ஒரு வழிமுறையைக் கூறுகின்றனர்.
* _ஓரடி நடவேன்_ ,
* _ஈரடி கடவேன்_ ,
* _இருந்து உண்ணேன்_ ,
* _படுத்து உறங்கேன்_ என்பதே அது.

அதற்கான விளக்கம்..

*ஓரடி நடவேன்* :- நமது உடம்பின் நிழல் கால் அளவில் ஓர் அடியாக இருக்கும் உச்சிப்பொழுது நேரத்தில் நான் வெளியில் நடக்க மாட்டேன். உச்சி வெயில் ஆகாது.

*ஈரடி கடவேன்* :- அதாவது, ஈர அடி கடவேன், ஈரமான இடங்களில் நீண்ட நேரம் நிற்பதோ, நடப்பதோ கூடாது என்பதால் அப்படி நடக்க மாட்டேன்.

*இருந்து உண்ணேன்* :- ஏற்கெனவே நான் சாப்பிட்ட உணவு வயிற்றில் இருக்கும் போதே மேலும் உண்ண மாட்டேன். நன்கு ஜீரணமான பின்புதான் மறுபடியும் சாப்பிடுவேன்.

*படுத்து உறங்கேன்* :- தூக்கம் வந்த பிறகுதான் படுக்கைக்கு செல்வேன். படுத்துக் கொண்டு தூக்கம் வரவில்லையே என நினைத்தபடி படுக்கையில் கிடக்கமாட்டேன்.

இதுவே, _நீண்டநாள் இளமையோடு வாழும் ரகசியம்_ என குறிபிடுகின்றனர் சான்றோர். *ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய வாழ்க்கைமுறை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்…..!*