குப்பைவண்டி விதி
கம்பெனியின் நிர்வாக அதிகாரி அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது.ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்ல டாக்சி ஒன்றை வரவழைத்தார்.
செல்லும் வழியில் அவர்களுக்கு முன்பு சென்ற கார் சிக்கினால் ஏதுமின்றி திடீரென திரும்பியதால் நிலை தடுமாறும் சூழல் ஏற்பட்டது. ஆனால் சுதாரித்த டாக்சி டிரைவர் பிரேக்கை பிடித்து முன் சென்ற காரை இடிக்காமல் லாவகமாக நிறுத்தினார்.
அந்த காரிலிருந்து எட்டிப்பார்த்த டிரைவர் தகாத வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்தான்.டாக்சி டிரைவரோ வாய் திறக்கவில்லை.மவுனமாக கேட்டதோடு புன்சிரிப்புடன் கைகளையும் காட்டினார். அவரது செயல்பாடுகள் தவறாக வண்டி ஒட்டிய நபரை எச்சரிப்பது போல் இல்லை. எதோ நெருங்கிய நண்பரிடம் பழகுவதுபோல் இருந்தது.
"ஏன் அவனை சும்மா விட்டீங்க? வெளுத்து வாங்கியிரு வேண்டாமா?.. அவன் மீது தப்பை வெச்சிக்கிட்டு நம்ம மேல் எகிறுகிறானே>" என்றார் நிர்வாக அதிகாரி.
அப்போது டிரைவர் சொன்ன தத்துவம் தான் ' குப்பை வண்டி விதி '. " ஐயா… மனிதர்களில் பலர் குப்பை வண்டி போல இருக்கிறார்கள். மனம் நிறைய குப்பைகள், அழுக்குகளைச் சுமந்து திருக்கின்றனர். விரக்தி, ஏமாற்றம், கொப்பம் அவர்களிடம் நிறைந்திருக்கும்.
குப்பைகள் சேர்ந்ததும், இறக்கி வைக்க இடம் தேவைப்படும் . சில நேரங்களில் நம்மிடம் இறக்கி வைப்பார்கள். அந்த குப்பையை நமக்குரியதாக கருதாமல் புன்சிரிப்புடன் கையை அசைத்தபடி இடத்தைவிட்டு விலக வேண்டும்.
அவர்கள் கொட்டும் குப்பை எண்ணங்களை நம் குடும்பத்திலோ அல்லது அலுவலகத்திலோ மற்றவர்கள் மீதோ திணிக்கக்கூடாது. இல்லாவிட்டால் நம் வாழ்வு பாழாகிவிடும்". என்றார். அவரது நல்லெண்ணத்தை அறிந்த அதிகாரி வியந்தார்.
இதில் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம் என்னவெனில் சாதனையாளர்கள் தங்களின் மனதிற்குள் குப்பை வண்டி நுழைய அனுமதிப்பதில்லை. காரணம் இன்றி யாராவது உங்கள் மீது எரிந்து விழுந்தாலோ கடுஞ்ச்சொற்கள் அள்ளி வீசினாலோ நிலை குலைய வேண்டாம். அவர்களிடம் சண்டையிடாதீர்கள். புநாகையை பதிலாக அளித்துவிட்டு அங்கிருந்து நகருங்கள்.
நம்மை சரியாக நடத்துபவர்களை நேசிப்போம்.அப்படி நடத்தாதவர்களுக்காக பிரார்த்திப்போம். வாழ்க்கை என்பது 10% நாம் எப்படி உருவாக்குகிறோம் என்பதையும் 90% நாம் ஒரு விஷயத்தை எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதை பொறுத்தது.
நன்றி: தினமலர், தமிழ வார இதழ், இணைப்பு:வாரமலர், சென்னை ஞாயிற்றுக்கிழமை 02
மே மாதம் 2021
ஏழைக்கு உதவி
அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆப்ரகாம் லிங்கன் வழக்கறிஞராக பணியாற்றி யபோது,பணக்கார் ஒருவர் அவரிடம் வந்தார். அவருக்கு ஏழை ஒருவர் ஐந்து டாலர் கடன் கொடுக்க வேண்டியிருந்தது. பணக்காரர் விவரத்தைச்சொல்லி, அவர் மீது வழக்குப் போட வேண்டும் என்று கேட்டுக்கொணடார்.
“வெறும் ஐந்து டாலர்களுக்காகவா வழக்கு போடப்போகிறீர்கள்?’ என்று லிங்கன் எவ்வளவோ எடுத்துச் சொல்லிப்பார்த்தும் அந்தப் பணக்காரர் கேட்பதாக இல்லை .
“சரி, எனக்கு வழக்காடுவதற்காக 10 டாலர் கட்டணமாக நீங்கள் தரவேண்டும்’ என்று லிங்கன் கேட்டார்.
பணக்காரரும் 10 டாலர்களை உடனே லிங்கனிடம் கொடுத்தா ர். அதை ப் பெ ற்றுக் கொண்டலிங்கன்,அந்த ஏழையை அழைத்து அவரிடம் 5 டாலர்களை க் கொடுத்துக் கடனை அடைக்கச்சொன்னார்.பணக்காரரும் கடன் தொகை கிடைத்த மகிழ்ச்சியில் தமது இல்லம் திரும்பினார்.